சிலாபம் – தெதுருஓயா – உதாகல கிராமத்தை சேர்ந்த ஒன்றரை மாத குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளது.
டெங்கு நோயால் சிலாபம் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் குழந்தை உயிரிழந்துள்ளதுடன், குழந்தையின் தாயும் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதேவேளை, தாயின் உடல் நிலை கவலைக்கிடமாகவுள்ளதால் குழந்தை இறந்த தகவலும் அவருக்கு தெரியப்படுத்தப்படவில்லை.
மேலும், நாட்டில் இந்த வருடம் ஜனவரி மாதம் முதல் இதுவரையான காலப்பகுதிக்குள் டெங்கு நோயினால் 225 பேருக்கு மேல் உயிரிழந்துள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.