• Tue. Apr 7th, 2026

அதிவேக வீதிகளின் நாளாந்த, வருமானம் 70 வீதத்தால் வீழ்ந்தது

Byadmin

Jul 24, 2022

அதிவேக வீதிகளின் நாளாந்த வருமானம் சுமார் 70 வீதத்தால் குறைவடைந்துள்ளது.

தற்போது நிலவும் எரிபொருள் நெருக்கடி காரணமாக இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் S. வீரகோன் தெரிவித்தார்.

சராசரியாக அதிவேக வீதிகளின் நாளாந்த வருமானம் 30 மில்லியனுக்கும் அதிகமாகவிருந்தது.

தற்போதைய சூழ்நிலையில் இந்நாட்களில் நாளாந்த வருமானம் 8 மில்லியனாக குறைந்துள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் S. வீரகோன் சுட்டிக்காட்டினார்.

இந்த நிலை கடந்த ஒரு மாதமாக நாளாந்தம் பதிவாகி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *