முன்னாள் அமைச்சர் சாகல ரத்நாயக்க ரணிலின் ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த நியமனம் தொடர்பில் உத்தியோகபூர்வ அறிவிப்பு எதுவும் வெளியிடப்படாத போதிலும், எரிபொருள் விநியோகம் தொடர்பான அதிபர் ஊடகப் பிரிவின் ஊடக அறிக்கையில் அவர் அதிபரின் ஆலோசகராக குறிப்பிடப்பட்டுள்ளார்.
சாகல ரத்நாயக்க இதற்கு முன்னர் பிரதமர் அலுவலகத்தின் தலைமை அதிகாரியாக பணியாற்றினார்.