• Mon. Oct 13th, 2025

ஜனாதிபதி பதவி விலகியதன் பின், செய்ய வேண்டியவை பற்றி பிரதமரிடம் சட்டமா அதிபர் விளக்கம்!

Byadmin

Jul 12, 2022

ஜனாதிபதி பதவிக்கு வெற்றிடம் ஏற்படின் மேற்கொள்ள வேண்டிய எதிர்கால செயற்பாடுகள் தொடர்பிலான சட்டமா அதிபரின் நிலைப்பாடு பிரதமரின் செயலாளருக்கு அனுப்பப்பட்டுள்ளது.

குறித்த விடயம் தொடர்பில் பிரதமரின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவினால் சட்டமா அதிபரின் நிலைப்பாடு வினவப்பட்டதன் அடிப்படையிலேயே இந்த பதில் அனுப்பப்பட்டுள்ளது எனினும் அதில் அடங்கியுள்ள தகவல்கள் வெளியாகவில்லை.

முன்னதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நாளைய தினம் தமது பதவி விலகலை உத்தியோகப்பூர்வமாக அறிவிப்பார் என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன தெரிவித்திருந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *