கட்டுகஸ்தோட்டை கல்வி வலயத்திற்குட்பட்ட அக்குறணை பானகமுவ முஸ்லிம் வித்தியாலயம் கவனிப்பார் அற்ற நிலையில் கானப்படுவதாக அப் பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.
அக்குறணை பிரதேசத்தில் வசதி குறைந்த ஒரு பாடசாலையாக கருதபப்டும் பானகமுவ முஸ்லிம் வித்தியாலயத்தில் தற்போது சுமார் 70 மாணவர்கள் ஆரம்ப பிரிவில் கல்வி கற்று வருவதாகவும் கட்டிடங்கள் அனைத்தும் பழுதடைந்த நிலையில் கானபப்டுவதாகவும் இப் பாடசாலையின் அபிவிருத்திற்காக பல வருடங்களாக முயற்சி செய்து வரும் அப் பிரதேசத்தை சேர்ந்த ஜே.சஹாப்தீன் தெரிவித்தார்.
இப் பாடசாலையின் தற்போதைய நிலை தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்யையில் இப் பாடசாலை சில வருடங்களுக்கு முன் நூற்றுக்கனக்கான மாணவர்கல்வி கற்றுவந்த ஒரு பாடசாலையாக இருந்த போதும் தற்போது 70 மாணவர்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
பாடசாலைக்கு சொந்தமான கட்டிடங்கள் அனைத்தும் பழுதடைநத நிலையில் உள்ளதாகவும் கூறைகள் உடைந்த நிலையில் உள்ளதாகவும் தெரிவித்தார்.
பாடசாலையின் நூலகத்திற்காக கட்டபப்ட்ட கட்டிடம் தற்போது எவ்வித பிரயோசனமும் முடியாத அளவிற்கு பழுதடைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
பாடசாலைக்கு எவ்வித அடிபப்டை வசதியும் இல்லை என்று தெரிவித்த அவர் பாடசாலைக்கு சொந்தமான காணிக்கு பாதுகாப்பு வேலி ஒன்று அவசியம் என்றும் தெரிவித்தார்.
1983 ம் ஆண்டிற்கு பின் இப் பாடசாலைக்கு எவ்வித கட்டிடமும் அரசினால் கட்டப்பட வில்லை என்றும் பாடசாலைக்கு விளையாட்டு மைதானம் போன்ற வசதிகளும் போதுமானளவு இல்லை என்றும் அப்பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.
-மொஹொமட் ஆஸிக் –