• Sun. Oct 12th, 2025

நீண்டகாலத்தின் பின் குழந்தை பாக்கியம் கிடைத்த தாய் மகிழ்ச்சியில் உயிரிழந்த சம்பவம் இலங்கையில்

Byadmin

Jul 14, 2017 ,

திருமணத்தின் பின்  நீண்ட இடைவெளியின் பின்னர் குழந்தை பாக்கியம் கிடைத்த தாய் ஒருவர், மகிழ்ச்சி தாங்கிக்கொள்ள முடியாது மாரடைப்பினால் மரணமடைந்துள்ளார்.

திருமணம் முடிந்து சில ஆண்டுகளின் பின்னர் முதல் குழந்தையை ஈன்றெடுத்த தாய் ஒருவர், சிசுவைப் பார்த்து அந்த சந்தோசத்தை தாங்கிக்கொள்ள முடியாது மரணித்துள்ளார்.

தம்புத்தேகம வைத்தியசாலையில் நேற்று முன்தினம் இந்த துரதிஸ்டவசமான சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இதய நாளங்கள் வெடித்து   குறித்த பெண் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

தம்புத்தேகம தெல்ஹிரிய என்னும் இடத்தைச் சேர்ந்த 31 வயதான தினுசிகா சந்தமாலி என்ற பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இவ்வாறான மரணங்கள் ஆயிரக்கணக்கானோரில் ஒரு மரணமே சம்பவிக்கும் என சட்ட வைத்திய அதிகாரி டாக்டர் எச்.பீ. கருணாதிலக்க தெரிவித்துள்ளார்.

குழந்தை ஈன்றெடுத்த போது தாய் ஆரோக்கியமாக இருந்தார் என தம்புத்தேகம வைத்தியசாலை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

குழந்தை நல்ல உடல் ஆரோக்கியத்துடன் இருப்பதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *