• Tue. Apr 7th, 2026

367 பொருட்களுக்கு இறக்குமதி தடை – ஜனாதிபதியினால் சிறப்பு வர்த்தமானி வெளியீடு

Byadmin

Aug 24, 2022

பல்வேறு அத்தியாவசியமற்ற பொருட்களின் இறக்குமதிகளுக்கு மறு அறிவித்தல் வரை தற்காலிக தடை விதித்து சிறப்பு வர்த்தமானி ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. 

நிதியமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்த வர்த்தமானியை வெளியிட்டுள்ளார் . 
இதன்படி பொதியிடப்பட்ட பால் உட்பட்ட சுமார் 367 பொருட்களுக்கு தற்காலிக இறக்குமதி தடை  விதிக்கப்பட்டுள்ளது . 
போதுமான அன்னிய செலாவணி கையிருப்பை கையாளும் வகையில் இந்த தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *