• Sun. Oct 12th, 2025

மாணவனின் சப்பாத்துக்குள் இருந்த பாம்பு குட்டி

Byadmin

Aug 24, 2022

மாணவனின் சப்பாத்துக்குள் இருந்து பாம்பு குட்டியொன்று இருந்த சம்பவமொன்று கொழும்பில் இடம்பெற்றுள்ளது.  

கொழும்பு ஆனந்த வித்தியாலயத்தில் பயிலும் 13 வயதான மாணவனின் சப்பாத்துக்குள்ளே  பாம்புக்குட்டி இருந்துள்ளது,  

இன்று (23) காலையிலேயே அந்த பாம்புக்குட்டி கண்டறியப்பட்டுள்ளது.  

மாணவன், பாடசாலை பஸ்ஸில் வந்துக்கொண்டிருந்த போது அவருடைய சாப்பாத்து ஒன்றுக்குள் ஏதோவொன்று இருப்பதாக உணர்ந்துள்ளான். பாடசாலைக்கு வந்து சப்பாத்தை கழற்றி பார்த்தபோதே பாம்புக்குட்டி இருந்தமை கண்டயறியப்பட்டுள்ளது.

பாம்புக்குட்டி கிடைத்ததன் பின்னர், கொழும்பு சீமாட்டி சிறுவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அந்த மாணவனின் உடலுக்குள் பாம்பின் விஷம், உடலுக்குள் செல்லவில்லை என்று வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்திய ஜே.விஜேசூரிய தெரிவித்தார்.

அந்த மாணவன், கடவத்தை பிரதேசத்தில் இருந்தே வந்துள்ளார். சப்பாத்தை அணிவதற்கு முன்னர், கொஞ்சம் கவனமாக பார்த்துவிட்டு அணியவேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *