ஆயுத ரீதியான போராட்டத்தை விட சிந்தனா ரீதியான போராட்டத்திற்கே பலம் அதிகம்
ஒரு சமூகத்தை ஒரே அடியாக அழிக்க வேண்டுமென்றால் அணு ஆயுதங்களையோ அல்லது நவீன தொழில்நுட்பங்களையோ வைத்து அழித்து விட முடியும். அது அத்துடன் முடிவடைந்து விடும். ஆனால் சிந்தனா ரீதியான போராட்டம் அவ்வாறல்ல.ஆயுத ரீதியான போராட்டத்திற்கு வித்திடுவதே இச் சிந்தனா ரீதியான போராட்டம் தான்.
ஒரு சமூகத்தை மிகவும் ஒரு உயர்ந்த நிலைக்கு இட்டுச்செல்வதும் அதே சமூகத்தை இழிவு நிலைக்கும் அழிவிற்கும் கொண்டு செல்வதும் இச்சிந்தனையே. இதை அழகாகவும்,உண்மையாகவும் பயன்படுத்தும்போது சமூகத்திற்கு நன்மையும் மோசமாக, உண்மைக்குப் புறம்பாக பயன்படுத்தும்போது சமூகம் அழிவிற்கு உல்லாகுவதை கண்கூடாக பார்க்கலாம்
.இன்று இஸ்லாத்திற்கும் முஸ்லிம்களுக்கும் எதிராக தேசத்திலும், சர்வதேசத்திலும் நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிகழ்வு இந்த மோசமான சிந்தனையின் விளைவென்றால் அது மிகையாகாது. இன்று பலராலும் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்ட மார்க்க மொன்றிருக்கு மென்றால் அது இஸ்லாமேயாகும்.
(islamophobia) இஸ்லாமிய எதிர்ப்பு, (media mafia) ஊடக மாபியா.இந்த media வை பிழையாகப் பயன்படுத்தித்தான் இந்த நாசகார வேளையை செய்கின்றார்கள்.இருந்தும் இவற்றை தெளிவு படுத்துவதற்கு இன்று முஸ்லிம்களுக்கென்று தனியானதொரு ஊடகம் இல்லாமை மிகப்பெரியதொரு குறைபாடாகும்.
தேசத்திலும்,சர்வதேசத்திலும் முஸ்லிம்களுக்கு எதிராக நடைபெறும் அநியாயங்களைப் பார்க்கும்போது எமக்கு வலிக்கிறது. நிச்சயமாக ஈமானிய உணர்வுல்ல ஒவ்வொரு முஸ்லிமுக்கும் இது வலிக்கத்தான் செய்யும். ஏன் இவர்கள் முஸ்லிம்களுக்கு எதிராக இவற்றை செய்கின்றார்கள் என்று பார்க்கும்போது பின்வரும் குர்ஆன் வசனம் ஞாபகம் வருகின்றது.
“வேதத்தையுடையவர்களில் பெரும்பாலானவர்கள் நம்பிக்கையாளர்களாகிய உங்களை நிராகரிப்பாளர்களாக மாற்றிவிட வேண்டுமே! என்று விரும்புகிறார்கள்.அவர்களுக்கு உண்மை தெளிவாகத் தெரிந்த பின்னும் இவ்வாறு அவர்கள் விரும்புவதன் காரணமெல்லாம் அவர்களுக்கு உங்கள் மீதுள்ள பொறாமைதான் ( பகரா:109).
இந்த வசனத்தின் பின்னனியை சற்று சிந்திக்கின்ற போது அதாவது உஹத் யுத்தத்தில் முஸ்லிம்களுக்கு தோல்வி ஏற்பட்ட அச்சந்தர்பத்தில் முஸ்லிம்களை நோக்கி நீங்கள் உண்மையான மார்கத்தில் இருந்திருந்தால் உங்களுக்கு இது போன்ற ஒரு தோல்வி ஏற்பட்டிருக்காது.எனவே எங்களுடைய மார்கத்திற்கு வந்துவிடுங்கள். இதுதான் உங்களுக்கு சிறந்ததாக இருக்கும். என்று அந்த யூதர்கள் முஸ்லிம்களைப்பார்த்து கூறியதற்கான காரண்த்தை அல்லாஹ் இவ்வாறு தெளிவு படுத்துகிறான்.அதாவது “எங்கள் மீதுள்ள பொறாமையே இவ்வாறு அவர்கள் கூறுவதற்கான காரணமாக இருக்கின்றது. அந்த அநியாயக்காரர்களுக்கு இறுதி முடிவு இவ் உலகத்திலும் அழிவு மறுமையிலும் நிரந்தர நரகமேயாகும். ஆனால் முஸ்லிம்களுக்கு இருக்கின்ற சுபசோபனம் என்னவென்றால் இறுதியில் முஸ்லிம்கள் வெற்றி பெறுவார்கள். இதுவே அல் குர்ஆன் கூறும் உண்மையாகும்.
As- sheikh
M.T.M. Irshadh (sharafy)