அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் அவர்களினால் உருவாக்கப்பட்ட மீள்குடியேற்ற செயலணியினூடாக மடு பிரதேச செயலகத்திற்குட்பட்ட சுமார் 15 குடும்பங்களுக்கான வீட்டுத்திட்டம் வழங்குவதற்கான காசோலை மடு பிரதேச செயலகத்தில் வழங்கிவைக்கப்பட்டது
இலங்கை உள்நாட்டு யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்த மக்களை மீண்டும் தமது சொந்த கிராமங்களுக்கு மீள்குடியேற்றம் செய்யும் நோக்குடன் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் அவர்களின் நீண்ட நாள் முயற்சியால் உருவாக்கப்பட்ட மீள்குடியேற்ற செயலணி ஊடாக 15 வீடுகளுக்கான காசோலை முதற்கட்டமாக இன்று வழங்கிவைக்கப்பட்டுள்ளது
மடு பிரதேச செயலாளர் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்விற்கு பிரதம அதிதியாக அமைச்சரின் இணைப்பாளர் முஜாஹிர் அவர்களும் மீள்குடியேற்ற செயலணியின் மன்னார் மாவட்ட இணைப்பாளர் முஜீப் அவர்களும் கலந்து சிறப்பித்தனர்