இலங்கை மத்திய வங்கியின் ஆளுனர் நந்தலால் வீரசிங்கவை பதவி நீக்கம் செய்வது அவசியமானால் அவருக்காக தாம் பதவி விலகவும் தயார் என வெளிவிவகார அமைச்சரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான அலி சப்ரி நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன் தலைமையில் நாடாளுமன்ற அமர்வுகள் இன்று முற்பகல் 9.30க்குஆரம்பமானது.
ஜனாதிபதியினால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட இடைக்கால வரவு செலவு திட்டத்தின் மீதான விவாதம் இன்றுடன் நிறைவடைகின்றது.
விவாதத்தின் நிறைவில் இன்று பிற்பகல் வாக்கெடுப்பு நடாத்தப்படவுள்ளது.