திருகோணமலை மாவட்டம்,தம்பலகாமம் பிரதேச செயலகப் பகுதியில் 98ம் கட்டை தாயிப் நகர் மற்றும் 97 சேனாவளி குளத்தை அண்டிய வயல் நிலப் பகுதியில் காட்டு யானை இரவில் புகுந்ததால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
அதிகாலை,இரவு (04) முதல் தொடர்ந்தும் இந்த காட்டு யானை ஊருக்குள் புகுந்துள்ளதால் பெரும் அச்ச நிலை ஏற்பட்டுள்ளதாக மக்கள் கவலை தெரிவிக்கின்றனர். வயல் நிலங்களுக்குள் தற்போது சிறுபோக அறுவடைக்கு தயாரான நிலையில் நெற் செய்கையை அழித்து விட்டுச் செல்வதாகவும் விவசாயிகள் தெரிவிக்கின்றனர். குறித்த காட்டு யானையானது தினமும் மாலை ஆறு மணிக்கே வயலுக்குள் புகுந்து ஊருக்குள்ளும் இக் கொம்பன் யானை வருவதால் சிறு பிள்ளைகளுடன் நிம்மதியாக தூங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.
பசளையின்றி பெரும் சிரமத்துக்கு மத்தியில் நெற் செய்கையை இம் முறை செய்து அறுவடைக்கு இன்னும் இரு வாரங்கள் இருந்த போதிலும் நெஸ்ரீ செய்கையை வயலுக்குள் புகுந்து துவம்சம் செய்து விட்டு செல்வதாக அப் பகுதிகள் விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
இக் காட்டு யானையில் இருந்து தங்களை பாதுகாக்க துரித நடவடிக்கை எடுக்குமாறும் உரிய அதிகாரிகளிடத்தில் கோரிக்கை விடுக்கின்றனர்.