சுயாதீன கட்சிகளின் ஒன்றியத்தால் ஆரம்பிக்கப்படவுள்ள புதிய கூட்டணியின் அங்குரார்பண நிகழ்வு (4) இடம்பெற்றது.
இந்த நிகழ்வு மஹரகம தேசிய இளைஞர் சேவை மன்ற வளாகத்தில் (4) இடம்பெற்றது.
ஆரம்பிக்கப்பட்டுள்ள புதிய கூட்டணிக்கு உத்தர லங்கா சபாகய என பெயரிடப்பட்டுள்ளது.
கூட்டணியில் இணையும் கட்சிகளின் தலைவர்கள் அந்த கூட்டணியின் கொள்கை அறிக்கையில் கையெழுத்திட்ட பின்னர், கூட்டணியின் புதிய நிர்வாகிகள் அறிவிக்கப்பட்டனர்.
இந்த கூட்டணியின் தேசிய சுதந்திர முன்னணி, ஜனநாயக இடதுசாரி முன்னணி, பிவித்துரு ஹெல உறுமய, இலங்கை கமியூனிஸ்ட் கட்சி மற்றும் இலங்கை சமசமாஜ கட்சி என்பன அங்கம் வகிக்கின்றன..