அமெரிக்காவின் தேசியக் கடன் 38 டிரில்லியன் அமெரிக்க டொலரை தாண்டியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அமெரிக்க திறைசேரி, நாட்டின் நிதி குறித்து அதன் சமீபத்திய அறிக்கையில் இந்த அதிர்ச்சியூட்டும் தகவலை வெளியிட்டுள்ளது. இந்த கடன் தொகையின்படி, ஒவ்வொரு அமெரிக்கருக்கும் 111,000 அமெரிக்க டொலர் கடனுள்ளது. உலகின் வல்லரசு நாடான அமெரிக்காவில் ஏற்கனவே பொருளாதார மந்தநிலை ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக தகவல் வெளியாகின. இந்த நிலையில் அந்நாட்டின் தேசியக் கடனும் வரலாறு காணாத அளவில் உயர்ந்திருப்பது தெரிய வந்துள்ளது.