சவூதி அரேபியா வளர்ச்சி சார்ந்த ” விஷன் 2030″ திட்டத்தின் பாகமாக கடந்த ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக சவூதி அரேபியாவில் நடைமுறையில் இருந்த (KAFFALA) கஃபீல் எனும் ஸ்பான்ஷர் நடைமுறையில் கடுமையான நிபந்தனைகள் அக்டோபர் 20 முதல் முடிவுக்கு வந்ததாக சவூதி அரேபியா இளவரசரும் பிரதமருமான முகமது பின் சல்மான் அறிவித்துள்ளார்.
இதுவரை இருந்த ஸ்பான்ஷர் நடைமுறை மூலம் வெளிநாடுகளில் இருந்து வேலைதேடி சவூதி அரேபியா வரும் குறைந்த கல்வியறிவுள்ள சாதாரண ஊழியர்கள் (Labours) மிகவும் சிரமப்பட்டதோடு, தங்கள் சவூதி வாழ்க்கை முழுவதும் ஒரேயொரு கம்பெனி அல்லது ஒரு குறிப்பிட்ட அரபு முதலாளியின் கீழே வேலை செய்யும் நிர்ப்பந்தம் கஃபீல் நடைமுறையில் நிர்ப்பந்தமாக இருந்தது..
ஸ்பான்ஷர் மூலம் தொழிலாளிகள் ஏற்கனவே பணியாற்றும் நிறுவனம் அல்லது அரபு முதலாளியின் முன் அனுமதியின்றி வேறு நல்ல வேலையில் சேருவதற்கோ, சவூதியை விட்டு வெளியேறுவதற்கோ, சட்ட உதவிகள் பெறுவதற்கோ முன்பு சிரமமாக இருந்தது.
மனிதாபிமானமிக்க அரபுகள் சில இடங்களில் இருந்தாலும் வெளிநாட்டு தொழிலாளர்களை கடுமையாக நடத்தும் இத்தகைய கஃபீல் நடைமுறையில் மாற்றம் கொண்டு வர 2019, 2021 ஆண்டுகளில் சவூதி தொழிலாளர் ஆணையம் அளித்த பரிந்துரைகள் முறையாக அமுல்படுத்தவில்லை..
கடந்த ஜுன் மாதம் சவூதி அரேபியா பிரதமர் முகமது பின் சல்மான் மீண்டும் சில திருத்தங்கள் செய்ய அறிவுறித்திய கஃபீல் திருத்த சட்டம் நேற்று முதல் அமுலுக்கு வந்தது…
இதன் மூலம் தொழிலாளிகள் வேறு கம்பெனிகள் மாறுவதற்கும், நிறுவன உரிமையாளர் அனுமதியின்றி சொந்த ஊருக்கு திரும்பவும், தேவையான சட்ட உதவிகள் பெறுவதற்கு தடையாக இருந்த ஸ்பான்ஷர் நடைமுறை கடுமையான சில ஷரத்துகள் முடிவுக்கு வந்துள்ளது மூலம் லட்சக்கணக்கான இந்தியர்கள் உட்பட தொழிலாளிகள் Skilled Labour பிரிவினர் பயனடைவார்கள் என்றும் தெரிகிறது..