• Thu. Oct 23rd, 2025

பயணச் சீட்டு வழங்கத் தவறிய 132 நடத்துநர்கள் மீது நடவடிக்கை

Byadmin

Oct 22, 2025

மேல் மகாணத்தில் பயணிகளுக்குப் பயணச் சீட்டு வழங்கத் தவறியதற்காக 132 தனியார் பேருந்து நடத்துநர்கள் மீது மேல் மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகாரசபை நடவடிக்கை எடுத்துள்ளது.

அத்துடன், செல்லுபடியாகும் பயணச் சீட்டுகள் இன்றிப் பயணம் செய்த 9 பயணிகளுக்கும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

மேலும், வாகனத்தைச் செலுத்தும் போது தொலைபேசியை பயன்படுத்துதல், உரிமம் இல்லாமல் பேருந்தை இயக்குதல், மற்றும் போலி ஆவணங்கள் வைத்திருத்தல் உள்ளிட்ட விதிமுறைகளை மீறியதற்காக 228 சாரதிகள் மற்றும் நடத்துநர்கள் தண்டனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

அவர்களின் சேவை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதுடன், கட்டாய மறுபயிற்சி (mandatory retraining) மேற்கொள்ளுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும் பயணச் சீட்டு வழங்கும் முறை இந்த மாதத்தின் 1ஆம் திகதி முதல் அமுல்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, தொடர்ச்சியான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *