• Thu. Oct 23rd, 2025

பறந்து கொண்டிருந்த ஏர் இந்தியா விமானத்தில் திடீர் கோளாறு!

Byadmin

Oct 22, 2025

இந்தியாவின் மும்பையில் இருந்து இன்று (22) அமெரிக்காவின் நெவார்க் நகரத்துக்கு புறப்பட்ட ஏர் இந்தியா விமானம், தொழில்நுட்ப கோளாறு காரணமாக மீண்டும் மும்பைக்கே திரும்பியுள்ளது.

ஏர் இந்தியா விமானம் AI 191 மும்பையில் இருந்து அமெரிக்காவின் நியூஜெர்சி அருகே நெவார்க் நகரத்துக்கு புறப்பட்டுச் சென்ற நிலையில் நடுவானில் பறந்து கொண்டிருந்த போது, விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளது.

தொழில்நுட்ப கோளாறை அடையாளம் கண்ட விமானிகள் குழு விமானத்தை உடனடியாக மீண்டும் மும்பைக்கே திருப்பியுள்ளனர்.

விமானத்தில் ஏற்பட்டுள்ள பழுது குறித்து பயணிகளிடம் தெரிவித்த விமான நிர்வாகம், அவர்களை பாதுகாப்பாக இறக்கி தங்குவதற்கும், உணவுக்கும் ஏற்பாடு செய்துள்ளதுடன் பின்னர், அவர்கள் வேறு விமானத்தில் நெவார்க் நகரத்துக்குச் செல்ல ஏற்பாடு செய்வதாகவும் அறிவித்துள்ளனர்.

இதேவேளை, நியோயோர்க் நகரத்தில் இருந்து மும்பை புறப்பட இருந்த விமானம் AI 144 ரத்து செய்யப்பட்டுள்ளதாக ஏர் இந்தியா நிர்வாகம் அறிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *