இந்தியா – அமெரிக்கா இடையே இருதரப்பு வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தை டில்லியில் நேற்று மீண்டும் தொடங்கியது.
அமெரிக்க வர்த்தகத் துறை பிரதிநிதி பிரெண்டன் லிஞ்ச் தலைமையிலான குழுவினருடன் மத்திய வர்த்தகத் துறை செயலர் தலைமையிலான குழுவினர் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இது ஆக்கப்பூர்வமாக இருந்ததாக மத்திய வர்த்தக அமைச்சகம் தெரிவித்துள்ளது. விரைவில் நடைபெற உள்ள அடுத்த சுற்று பேச்சுவார்த்தையில் வர்த்தக ஒப்பந்தம் இறுதி செய்யப்படும் என அமெரிக்க தரப்பு தெரிவித்துள்ளது.