• Sat. Oct 11th, 2025

900 ஆண்டுகள் பழமையான பெண்ணின் மண்டை ஓடு மூலம் முகத்தை உருவாக்கிய விஞ்ஞானிகள்

Byadmin

Sep 17, 2025

இங்கிலாந்தின் கெண்டல் நகரில் கடந்த 2022-ம் ஆண்டு நீர் மேலாண்மை பணிகள் தொடங்கியது. அப்போது அங்குள்ள தேவாலயம் அருகே சில எலும்பு கூடுகள் கிடைத்தன. அவற்றை அதிகாரிகள் கைப்பற்றி தொல்லியல் துறையிடம் ஒப்படைத்தனர். அவர்கள் நடத்திய ஆய்வில் அந்த எலும்பு கூடுகள் 900 ஆண்டுகள் பழமையானவை என்பது உறுதியானது.

இதற்கிடையே அங்கு கைப்பற்றிய ஒரு பெண்ணின் மண்டை ஓடு மறுகட்டமைப்புக்கு ஏற்ற நிலையில் இருந்தது. எனவே அந்த பெண்ணின் முகம் எப்படி இருந்திருக்கும் என்பதை கண்டறியும் பணியில் லிவர்பூல் ஜார் மூர்ஸ் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் ஈடுபட்டனர். தொழில்நுட்பம் மூலம் உருவாக்கப்பட்ட அந்த பெண்ணின் முகம் கெண்டல் தேவாலயத்தில் பொதுமக்களின் பார்வைக்காக தற்போது வைக்கப்பட்டு உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *