காஸாவில் உள்ள ஒரு தம்பதியினர், சிங்கப்பூர் நிறுவனம் வழங்கிய உதவிக்கு நன்றி தெரிவிக்க, தங்களுக்கு புதிதாகப் பிறந்த பெண் குழந்தைக்கு “சிங்கப்பூர்” (Singapore) என்று பெயரிட்டுள்ளனர்.
இந்த குழந்தை கடந்த 16ஆம் திகதியன்று பிறந்துள்ளது.குழந்தையின் தந்தை ஹம்தான் ஹடாட் காஸாவில் ‘லவ் எய்ட் சிங்கப்பூர்’ நடத்தி வரும் இலவச உணவுக் கூடத்தில் இரண்டு ஆண்டுகள் சமையல் பணியாளராக பணிபுரிந்துவந்துள்ளார்.நெருக்கடியான நேரத்தில் தங்கள் குடும்பத்துக்கு ஆதரவளித்த நாட்டை கௌரவிக்கும் வகையில், இந்த வித்தியாசமான பெயரை தாங்கள் தேர்ந்தெடுத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளனர்.போரினால் ஏற்பட்ட பஞ்சத்துக்கு மத்தியில், தனது மனைவி கர்ப்ப காலத்தில் தொடர்ந்து உணவுக் கூடத்தில் வழங்கப்படும் உணவுகளை நம்பியிருந்ததாகவும், இது அவர் உயிர்வாழ உதவியதாகவும் ஹம்தான் ஹடாட் தெரிவித்துள்ளார்.லவ் எய்ட் சிங்கப்பூர், புதிதாகப் பிறந்த பலஸ்தீனக் குழந்தைக்குத் தங்கள் அன்பான வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளது.