• Wed. Oct 15th, 2025

சட்டவிரோத மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட ஐவர் கைது

Byadmin

Sep 16, 2022

ஹட்டன் – பொகவந்தலாவ, மாவெலி வனப்பகுதியில் சட்டவிரோதமாக மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்டு வந்த ஐந்து சந்தேகநபர்களை பொகவந்தலாவ பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இந்த கைது சம்பவம் நேற்று இடம்பெற்றதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

சட்டவிரோத மாணிக்கக்கல் அகழ்வு

மாவெலி வனப்பகுதியில் இடம்பெற்று வந்த சட்டவிரோத மாணிக்கக்கல் அகழ்வு தொடர்பில் பொகவந்தலாவ பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கு அமைய மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது இந்த ஐந்து சந்தேகநபர்களும் கைது செய்யப்பட்டதோடு, மாணிக்கக்கல் அகழ்விற்கு பயன்படுத்தப்பட்ட உபகரணங்களையும் பொலிஸார் கைபற்றியுள்ளனர்.

கைது செய்யப்பட்ட ஐந்து பேரும் பொகவந்தலாவ இராணிகாடு மற்றும் ஆல்டி தோட்ட பகுதிகளை சேர்ந்தவர்கள் என பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொகவந்தலாவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *