ஐரோப்பிய பிராந்தியத்துக்கான உலகக் கிண்ண தகுதிகாண் போட்டிகளில், ஐஸ்லாந்தில் செவ்வாய்க்கிழமை (14) நடைபெற்ற அந்நாட்டுக்கும் பிரான்ஸுக்குமிடையிலான போட்டியானது 2-2 என்ற கோல் கணக்கில் சமநிலையில் முடிவடைந்தது.
பிரான்ஸ் சார்பாக கிறிஸ்தோபர் என்குங்கு, ஜீன்-பிலிப் மடெடா ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர். ஐஸ்லாந்து சார்பாகப் பெறப்பட்ட கோலை விக்டர் பல்ஸன், கிறிஸ்டியன் ஹிலின்சன் ஆகியோர் தலா ஒவொரு கோலைப் பெற்றனர்.
இதேவேளை கொஸோவாவில் நடைபெற்ற அந்நாட்டுடனான போட்டியில் 0-1 என்ற கோல் கணக்கில் சுவீடன் தோற்றது. கொஸோவா சார்பாகப் பெறப்பட்ட கோலை பிஸ்னிக் அஸ்லானி பெற்றிருந்தார்.
இந்நிலையில் ஸ்லோவேனியாவில் நடைபெற்ற அந்நாட்டுக்கும் சுவிற்ஸர்லாந்துக்குமிடையிலான போட்டியானது 0-0 என்ற கோல் கணக்கில் சமநிலையில் முடிவடைந்தது.