• Sat. Apr 4th, 2026

மழையால் முடிவில்லாமல் போன இலங்கை போட்டி

Byadmin

Oct 15, 2025

பெண்களின் உலகக் கிண்ணத் தொடரில் கொழும்பு ஆர் பிரேமதாஸ மைதானத்தில் செவ்வாய்க்கிழமை (14) நடைபெற்ற நியூசிலாந்துடனான இலங்கையின் போட்டியானது மழையால் முடிவேதும் பெறப்படவில்லை.

இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை, நிலக்‌ஷிகா சில்வாவின் ஆட்டமிழக்காத அதிரடியான 55 (28), அணித்தலைவி சாமரி அத்தப்பத்துவின் 53 (72), ஹசினி பெரேராவின் 44 (61), விஷ்மி குணரத்னவின் 42 (83), ஹர்ஷித சமரவிக்கிரமவின் 26 (31) ஓட்டங்களோடு 50 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 258 ஓட்டங்களைப் பெற்றிருந்ததுடன் மழை குறுக்கிட்டிருந்தது. சோபி டெவின் 3, பிறீ இல்லிங் 2, றோஸ்மேரி மைர் ஒரு விக்கெட்டைக் கைப்பற்றியிருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *