சர்வதேச குஜுர்யு கராத்தே மற்றும் சோட்டோகன் கராத்தே திறந்த சம்பியன்ஷிப்பில் 12 வயது பிரிவின் கீழ் இடம்பெற்ற காத்தா பிரிவில் புத்தளம் எருக்கலம்பிட்டியைச் சேர்ந்த ரைசுதீன் ஷெஷாட் அஹமட் இரண்டாமிடத்தைப் பெற்றார்.
வயம்ப பல்கலைக்கழத்தில் ஐ.ஜீ.கே.ஏ. இலங்கை கிளை சனிக்கிழமை (04) நடாத்திய இச்சம்பியன்ஷிப்பில் இந்தியா, மலேசியா மற்றும் நியூசிலாந்து நாட்டைச் சேர்ந்த கராத்தே வீரர்களும் இதில் கலந்துகொண்டனர்.