கதிர்காமம் பிரதேச சபை நேற்று (22) நள்ளிரவு முதல் கலைக்கப்பட்டு அதி விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
கதிர்காமம் பிரதேச சபை கலைக்கப்பட்டுள்ளதாக ஊவா மாகாண ஆளுநர் ஏ.ஜே.எம் முஸம்மில் இன்று அறிவித்துள்ளார்.
கதிர்காமம் பிரதேச சபை 2022 செப்டெம்பர் 22 ஆம் திகதி வியாழக்கிழமை முதல் அமுலுக்கு வரும் வகையில் கலைக்கப்பட்டுள்ளதாக ஆளுநர் முஸம்மில் தெரிவித்தார்.
மறு அறிவித்தல் வரை கடமைகளை மேற்கொள்வதற்காக மொனராகலை பதில் உள்ளூராட்சி ஆணையாளர் நியமிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.