• Fri. Oct 24th, 2025

இதயம் செயலிழந்த கர்ப்பிணிக்கு அபூர்வ சத்திர சிகிச்சை – தாயையும், குழந்தையையும் காப்பாற்றிய அரிதான செயல்

Byadmin

Sep 23, 2022

மாதம்ப பிரதேசத்தில் இதயம் செயலிழந்த கர்ப்பிணித் தாய்க்கு நடந்த அபூர்வ சத்திர சிகிச்சை தொடர்பான செய்தி ஒன்று வெளியாகியுள்ளது.

குறித்த தாய்க்கு இரண்டு மணி நேரம் செயற்கை இதயத் துடிப்பு அளித்து சிசேரியன் அறுவை சிகிச்சைக்குப் பிறகு மருத்துவக் குழுவினர் குழந்தையையும் தாயையும் காப்பாற்றினர்.

மாதம்ப கல்முலுவில் வசிக்கும் ஹலவத்த பொது வைத்தியசாலையின் மருத்துவக் குழுவினால் இந்த அரிய சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

கடந்த 20ஆம் திகதி இரவு 11.25 மணியளவில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட கர்ப்பிணிப் பெண்ணின் இதயம் சில நிமிடங்களில் நின்றுவிட்டதாக வைத்தியர்கள் தெரிவித்தனர்.

உடனடியாக அங்கு செயற்பட்ட வைத்தியர்கள் அவருக்கு செயற்கை இதயத்துடிப்பு கொடுத்து சிசேரியன் சத்திர சிகிச்சை செய்துள்ளனர்.

இவ்வாறான நிலையில் இரு  உயிர்களையும் காப்பாற்றுவது மிகவும் அரிதானது என வைத்தியர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

“இது மிகவும் அரிதான வாய்ப்பு. இதுவரை என் வாழ்நாளில் இதுபோன்ற வாய்ப்புகள் கிடைத்ததில்லை. இந்த நிலையில் இருவரின் உயிரையும் காப்பாற்றுவது மிகவும் அரிதான ஒரு செயல் என” சிறப்பு மருத்துவர் கயான் டி சில்வா தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *