• Sat. Oct 11th, 2025

பல்கலைக்கு தெரிவு செய்யப்பட்டர்களிடமிருந்து புலமைபரிசிலுக்கு விண்ணப்பம் கோரல்

Byadmin

Jul 22, 2017
Forum for Education and Moral Improvement – Gintota நிறுவனத்தினால் தென்மாகாணத்திலிருந்து பல்கலைக்கழகம் தெரிவு செய்யப்படும் தேவையுடைய மாணவர்களுக்கு மாதாந்தம் புலமைப் பரிசில் உதவுதொகை வழங்கப்படுவது எல்லோரும் அறிந்ததே.
 
மூன்றாவது Batch க்கான புலமைப் பரிசில் வழங்குவதற்கான ஏற்பாடுகளை நிறுவனம் செய்து கொண்டிருக்கின்றது. புலமைப் பரிசில் உதவுதொகை தேவையுடைய மாணவர்கள் தங்களது சுய விபரக் கோவையை (Bio Data) பின்வரும் விலாசத்திற்கு அனுப்பி வைக்குமாறு வேண்டிக் கொள்கின்றோம். 
 
M.K.M. Rasmy.
210 G, Godawatta, 
Gintota, Galle.
 
விண்ணப்ப இறுதித் திகதி 31.07.2017ஆகும். 
 
குறிப்பு – குறித்த புலமைப் பரிசில் சில தனவந்தர்களுடைய ஸகாத் நிதியத்தினால் வழங்கப்படுவதனால் தேவையுடைய மாணவர்கள் மாத்திரம் விண்ணப்பிக்குமாறு வேண்டிக் கொள்கின்றோம். வசதி படைத்தவர்கள், வேறு நிறுவனங்களிலிருந்து புலமைப் பரிசில் பெறுபவர்கள் விண்ணப்பிப்பதிலிருந்து தவிர்ந்து கொள்ளுமாறு வேண்டிக் கொள்கின்றோம் 
 
தென்மாகாண மாணவர்களுக்கு மாத்திரமே இப்புலமைப் பரிசில் உதவுதொகை வழங்கப்படுகின்றது. எதிர்காலங்களில் ஏனைய பகுதி மாணவர்களுக்கும் வழங்கும் வகையில் தேசிய ரீதியில் எமது நிறுவனம் வளர்ச்சியடைய உங்கள் பிரார்த்தனைகளை எதிர்பார்க்கின்றோம்
 
M.K.M. Rasmy.
President,
Forum for Education and Moral Improvement – Gintota 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *