• Sat. Oct 11th, 2025

கொழும்பு துறைமுக நகரத்தின் மாதிரி படங்கள் வெளியீடு

Byadmin

Jul 22, 2017

சீனா முதலீட்டில் மேற்கொள்ளப்படும் கொழும்பு துறைமுக நகரத் திட்டத்தை வடிவமைப்புச் செய்வதற்கான உடன்பாட்டை பெற்றுக் கொள்வதற்காக, உலகின் முன்னணி கட்டிட வடிவமைப்பு நிறுவனங்கள் மத்தியில் கடும் போட்டி காணப்பட்டது.

இந்தப் போட்டியில், சீனாவின் 1.5 பில்லியன் டொலர் முதலீட்டிலான துறைமுக நகரத்தை, அமெரிக்காவின் பிரதான கட்டிட வடிவமைப்பு நிறுவனமான, ஸ்கிட்மோர், ஓவிங்ஸ் அன் மெரில் நிறுவனம் பெற்றுள்ளதுடன், வடிமைப்பிலும் ஈடுபடவுள்ளது.

1.5 பில்லியன் முதலீட்டில் மேற்கொள்ளப்படும் இந்த திட்டம் நிறைவு செய்யப்படும் போது, இதன் பெறுமானம் 15 பில்லியன் டொலர்களாக அதிகரிக்கும்.

பிரதானமாக, ஜப்பானின் நிக்கென் செக்கெய் மற்றும் சான்பிரான்சிஸ்கோவின் ஜென்ஸ்லர் மற்றும், ஸ்கிட்மோர், ஓவிங்ஸ் அன் மெரில் ஆகிய நிறுவனங்களுக்கிடையில் மிகவும் கடுமையான போட்டி இருந்தது.

இதில், ஸ்கிட்மோர், ஓவிங்ஸ் அன் மெரில் நிறுவனமே, துறைமுக நகரத்தை வடிவமைப்பதற்கான கட்டளையைப் பெற்றிருக்கிறது.

இந்த நிறுவனத்தின் வடிவமைப்பு தொடர்பான மாதிரிப் படங்களும் வெளியாகியுள்ளது. இந்த மாதிரிப் படத்தில் இந் நகரம் சர்வதேச நாடுகளில் வடிமைக்கப்பட்டுள்ள நகரங்களைப் போன்று பளபளப்பாக இருப்பதனை அவதானிக்க முடிகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *