தேசிய காங்கிரஸ் தலைவர் எ.எல்.எம். அதாஉல்லாஹ் இன்று 2017.07.21 வட புல மக்களுக்கான எழுச்சி பயணத்தை ஆரம்பித்தார்
இதன் போது புத்தளம் எரிக்கலம்பிட்டி பிரதேசத்தில் அமைந்துள்ள முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மர்ஹூம் நூர்தீன் மசூர் அடக்கஸ்தலத்துக்கு சென்று துஆ பிராத்தனையில் ஈடுபட்டார்.
அங்கு மக்களால் மிகுந்த வரவேற்பளிக்கப்பட்டார்.
இதன் போது கிழக்கு மாகாண எதிர்கட்சி தலைவர் எம்.எஸ் உதுமாலெப்பை உள்ளிட்ட பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.