• Mon. Oct 13th, 2025

ஆணுறுப்பை அறுத்துக்கொண்ட கணவன் – மனைவி வீண்பழி சுமத்தியதால் விபரீதம்

Byadmin

Nov 27, 2022

(வீரகேசரி)

மனைவி தன்மீது வீண்பழி சுமத்தினார் என்பதற்காக அவரது கணவன் தனது ஆணுறுப்பைக் கூரிய ஆயுதத்தால் அறுத்துக்கொண்ட சம்பவம் ஒன்று பொல்பித்திகமவில் இடம்பெற்றுள்ளது. 

பொல்பித்திகம பொலிஸ் பிரிவைச் சேர்ந்த குறித்த நபர், சனிக்கிழமை (நவ.26) மாலை வெளியே சென்று மீண்டும் வீட்டுக்குத் திரும்பியபோது அவரது மனைவி வழிதவறிய நடவடிக்கையில் ஈடுபட்டதாகக் கூறி  கணவர் மீது  குற்றம் சுமத்தியபோது அவர்  வீண் பழி சுமத்த வேண்டாம் என்று கூறியுள்ளார்.

பின்னர் அவர் தனது ஆணுறுப்பை வெட்டியுள்ளார். இந்தநிலையில், வெட்டுக்காயங்களுடன் பொல்பிதிகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகவும், மேலதிக சிகிச்சைக்காக உடனடியாக குருணாகல் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டதாகவும்  தெரிவிக்கப்படுகிறது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *