• Sun. Oct 26th, 2025

மீண்டும் சேவையில் இணையும் விரிவுரையாளர்கள்

Byadmin

Dec 19, 2022

பேராதனை பல்கலைக்கழகத்தின் கலைப் பீட விரிவுரையாளர்களின் தொழிற்சங்கத்தின் நடவடிக்கை இன்றுடன் (19) நிறைவடையவுள்ளது.

அதன்படி இன்று முதல் கலைப் பீடத்தின் கல்வி நடவடிக்கைகள் வழமை போன்று இடம்பெறும் என பேராதனை பல்கலைக்கழக கலைப் பீட ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.

பேராதனைப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் உபவேந்தரான பேராசிரியர் அதுல சேனாரத்னவும் அவரது மகன் மீதும் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவம் தொடர்பில் இவ்வாறு விரிவுரையாளர்கள் தமது கடமைகளில் இருந்து விலகுவதற்கான தொழிற்சங்க நடவடிக்கையை அண்மையில் ஆரம்பித்துள்ளனர்.

இதன்படி கடந்த 13 ஆம் திகதி முதல் இன்று வரை கலைப் பீட ஆசிரியர்கள் பரீட்சை கடமைகள் உட்பட சகல கடமைகளில் இருந்தும் விலக நடவடிக்கை எடுத்திருந்தனர்.

எவ்வாறாயினும், இன்று காலை முதல் மீண்டும் தமது கடமைகளில் ஈடுபடவுள்ளதாக பேராதனை பல்கலைக்கழக கலைப் பீட ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.

பேராசிரியர் அதுல சேனாரத்ன மீதான தாக்குதல் தொடர்பில் சுமார் 12 பல்கலைக்கழக மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *