• Tue. Oct 28th, 2025

வேலைவாய்ப்புக்காக சென்ற இலங்கையர்களின் எண்ணிக்கை

Byadmin

Dec 19, 2022

அடுத்த வருடம் மார்ச் மாதம் முதல் வீட்டுப்பணிப் பெண்களுக்காக வேலையாட்கள் வெளிநாடுகளுக்கு அனுபப்படுவது நிறுத்தப்படவுள்ளதாக தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

மாறாக சர்வதேச தரத்திலான உயர்தர வீட்டு பராமரிப்பு உதவியாளர்களை பணிக்கு அனுப்ப தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த வருடத்தில் வெளிநாடுகளுக்கு வேலைவாய்ப்புக்காக சென்ற இலங்கையர்களின் எண்ணிக்கை மூன்று இலட்சத்தையும் தாண்டியுள்ளது.

ஒரு வருடத்தில் மிகக் கூடுதலான இலங்கையர்கள் வெளிநாட்டுக்கு வேலைவாய்ப்புக்காக சென்ற முதல் சந்தர்ப்பம் இந்த வருடத்தில் பதிவாகி உள்ளது.

சர்வதேச புலம்பெயர்ந்தோர் தினத்தை முன்னிட்டு வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் மானுஷ நாணக்கார இந்த விடயங்களை குறிப்பிட்டார்.

பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ள பல உலக நாடுகள் தமது நாட்டுப் பிரஜைகளை வெளிநாடுகளுக்கு வேலைவாய்புக்காக அனுப்புவதன் மூலம் அந்த நெருக்கடியின் தாக்கத்தை குறைத்துக் கொள்ள நடவடிக்கை எடுத்து வருகின்றன.

அந்த வகையில், இலங்கையும் பயிற்சி பெற்ற மற்றும் திறன் விருத்தி கொண்ட ஊழியர்களை வெளிநாடுகளுக்கு அனுப்பி வருகிறது. இருப்பினும் சட்டவிரோதமாக வெளிநாடுகளுக்கு சென்ற இலங்கையர்கள் தொடர்பிலும் சில முறைப்பாடுகள் கிடைத்துள்ளன என்று அமைச்சர் குறிப்பிட்டார்.

அவ்வாறு செல்பவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் பதிவு செய்து அதன் பின்னர் வெளிநாடு செல்பவர்களுக்கு தொழில் பாதுகாப்பும் ஏனைய சலுகைகளும் கிடைக்கும் என்று அமைச்சர் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *