‘உன்னை இன்னும் ஐந்து நிமிடத்தில் கொன்று விடுவோம்’ என பொதுபலசேனா அணியினர் வட்டரக விஜித்த தேரருக்கு மிரட்டல் விடுத்துள்ளனர்.
ஜனாதிபதி செயலகத்திற்கு முன்னால் இச்சம்பவம் இன்று பகல் (01) நடைபெற்றது.
இச்சம்பம் தொடர்பில் தெரியவருவதாவது
மஹியங்கணை பிரதேசத்தின் சுதந்திரக் கட்சி அமைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள பொதுபலசோனாவின் முக்கியஸ்தரை நீக்குமாறு ஜனாதிபதி செயலகத்திற்கு முன்னால் வடரக்க விஜித்த தேரர் இன்று காலையிலிருந்து உண்ணாவிரதம் இருந்து வருகின்றார்.
இதன் போது அவ்விடத்திற்கு பஜரோ வாகனத்தில் விரைந்து வந்த பொதுபல சேனா உறுப்பினர்கள் வடரக்க விஜித்த தேரரை தாக்குவதற்கு முனைந்ததுடன் ‘ நீ இந்த இடத்தை விட்டு ஓடாவிட்டால் இன்னும் ஐந்து நிமிடத்தில் ஞானாசார வந்து உன்னைக் கொல்வார்’ என்று மிரட்டல் விடுத்துள்ளனர்.
இச்சந்தர்ப்பத்தில் ஜனாதிபதி செயலகத்திற்கு முன்னால் பதற்றம் ஏற்பட்டது.
இதன் போது பொலிசார் பொதுபலசேனா அணியினரை அவ்விடத்தை விட்டு அகற்றினர்.
பொதுபலசேனா அணியினர் வடரக்க தேரருக்கு அச்சுறுத்தல் விடுக்கும் போது பொலிசார் சுற்றிநின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிந்ததாக அறியவருகின்றது.
தற்போது வடரக்க தேரர் தனிமையில் உண்ணாவிரதப் போராட்டத்தை ஜனாதிபதி செயலகத்திற்கு முன்னால் தொடர்ந்து கொண்டிருக்கின்றார்.
இவ்விடத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
பொதுபலசேனா அணியினர் மீண்டும் இவ்விடத்திற்கு வருகை தரலாம் என்ற அச்சம் நிலவுகின்றது.