வடரக்க விஜித்த தேரருக்கு 14 நாட்கள் விளக்க மறியில் விதிக்கப்பட்டுள்ளது.
கோட்டே நீதிவான் இந்த உத்தரவை இன்று நண்பகல் பிறப்பித்தார்.
போக்கவரத்திற்கு தடை ஏற்படுத்தியமை, உயர் பாதுகாப்பு வலயத்தினுள் நுழைந்தமை என இவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளன.
தற்போது இவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் வைத்தியசாலைக்கு வருகை தந்த நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்தார்.
இவர் உடல் சுகயீனமுற்று தொடர்ந்து கொழும்பு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக எமது இணையத்தளத்தின் கொழும்புச் செய்தியாளர் குறிப்பிடுகின்றார்.
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் மட்டக்களப்புக்கு வருகை தந்தை கலகொட ஞானசார தேரர் நீதிமன்ற உத்தரவை கிழித்து எறிந்ததுடன் போக்குவரத்தையும் தடை செய்தார்.
அதுமாத்திரமன்றி நீதிமன்றத்தினுள் நுழைந்து நீதிபதிக்கு முன்னால் குரல் உயர்த்திப் பேசியும் அவர் பொலிசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.