• Sat. Oct 11th, 2025

அட்சோ அமைப்பின் இலவச கருத்தரங்குகள்

Byadmin

Aug 2, 2017

அம்பாரை மாவட்ட சமூக சேவை அமைப்பான அட்சோ (ADDSO) நிறுவனத்தினால் தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சை எழுதும் மாணவர்களுக்கான இலவச கருத்தரங்குகள் அம்பாரை மாவட்டத்தில் பல இடங்களிலும் தொடராக நடத்தப்பட்டு வருகின்றன.

வரையறுக்கப்பட்ட அரச வர்த்தக (பொது) கூட்டுத்தாபனத்தின் அனுசரணையோடு அமைப்பின் தலைவர் ஏ. ஆர். எம். ஜிப்ரி  மற்றும் கந்தளாய் றியாஸ் முஹம்மட் ஆகியோர் வளவாளர்களாகக் கலந்து கொண்டு நடத்தப்பட்டுவரும் இந்த இலவச கருத்தரங்குகளில் இம்முறை தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சை எழுதும் ஏராளமான மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு பயனடைந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

-எம்.எஸ்.எம்.ஸாகிர் –

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *