ஓய்வு பெற்ற ஆயுதப்படை அதிகாரிகளின் திறந்த மடல்
பெறுதல்
இந்திய பிரதமர்,
மாநில முதலமைச்சர்கள் மற்றும் துணைநிலை ஆளுநர்கள்
நாங்கள் இந்திய ஆயுதப்படையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்கள். இந்த நாட்டின் பாதுகாப்பிற்காக எங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்துக் கொண்டவர்கள். ஒரு குழுவாக எங்களுக்கு எந்த கட்சியுடனும் தொடர்பில்லை. எங்களின் அர்ப்பணிப்பு இந்திய அரசியலமைப்பிற்கு மட்டுமே.
இக்கடிதம் எழுத வேண்டிய நிலை வந்ததற்காக வருந்துகிறோம். ஆனால் நம் தேசத்தை தற்போது சூழ்ந்து வரும் பிளவுவாதம் எங்களை வருத்தமுறச் செய்திருக்கிறது. அதுதான் இக்கடிதமெழுத எங்களை நிர்ப்பந்தித்திருக்கிறது. ‘எங்கள் பெயரால் வேண்டாம்’ என்கிற இயக்கத்தோடு எங்களை அடையாளப்படுத்திக் கொள்கிறோம்.
நாட்டு மக்களை சூழ்ந்து வரும் பயம், கொலைமிரட்டல், வெறுப்பு, சந்தேகம் ஆகியவற்றுக்கெதிராக ஆயிரக்கணக்கான மக்களை நாடு முழுவதும் அந்த இயக்கம் திரட்டியது.
நமது ஆயுதப்படை, “வேற்றுமையில் ஒற்றுமை” என்பதை உறுதியாக பற்றி நிற்கிறது. மதம், மொழி, சாதி, பண்பாடு அல்லது எந்த ஒரு அடையாளத்தால் உருவாகும் வேறுபாடும் ஆயுதப்படைகளுக்கொரு பொருட்டாக இருந்ததில்லை. பல பின்னணிகளைக் கொண்ட ஆயுதப்படை வீரர்கள் தோளோடு தோள் நின்று நம் நாட்டைப் பாதுகாக்க போராடியிருக்கிறோம். அது இன்றும் தொடர்ந்து கொண்டிருக்கிறது.
எங்கள் பணிக்காலம் முழுவதும் வெளிப்படைத்தன்மையும், நீதியும், நியாயமுமே எங்கள் செயல்பாடுகளுக்கு எங்களை வழிநடத்தின. நாமெல்லாம் ஒரே குடும்பம். மயில் தோகை போன்று பல வண்ணங்கள் இணைந்ததே நமது பாரம்பரியம். அதாவது இந்தியா. துடிப்பான இப்பன்முகத்தன்மையை நாங்கள் போற்றிப் பாதுகாக்கிறோம்.
ஆனால், இன்று நாம் காண்பதென்ன? நம் நாட்டில் நடைபெறும் செயல்கள் நம் ஆயுதப்படைகளையும், அரசியலமைப்பு எதையெல்லாம் பாதுகாக்க உருவாக்கப்பட்டதோ, அதையும் காயப்படுத்தியிருக்கிறது. இந்து மதத்தின் பாதுகாவலர்களாக தங்களைத் தாங்களே நியமித்துக் கொண்டவர்கள் சமூகத்தின் மீது முன்னெப்போதும் காணாத வகையில் நம் கண்முன்னே தாக்குதல் தொடுக்கிறார்கள். இஸ்லாமியர்களையும், தலித் மக்களையும் குறிவைத்து நடத்தப்படும் இத்தாக்குதல்களை நாங்கள் கண்டிருக்கிறோம்.
பேச்சு சுதந்திரத்தை குறிவைத்து ஊடக நிறுவனங்கள் , சிவில் சமூகம், பல்கலைக்ழகங்கள், பத்திரிகையாளர்கள், அறிஞர்கள் ஆகியோர் மீது அவர்களை தேசவிரோதிகள் என முத்திரை குத்தி வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்படுவதையும், அரசமைப்புக்கள் இவற்றைக் கண்டு கொள்ளாமலிருப்பதையும் நாங்கள் கண்டிருக்கிறோம்.
நாங்கள் இனிமேலும் கண்டு கொள்ளாமல் இருக்க முடியாது. இப்போதாவது, நமது அரசியல் சட்டம் சுவீகரித்துள்ள மதச்சார்பற்ற, தாராளவாத விழுமியங்களுக்கு ஆதரவாக நிற்கவில்லையென்றால் நம் தேசத்திற்கு ஆற்ற வேண்டிய கடமையில் இருந்து தவறியவர்களாவோம்.
பன்முகத்தன்மையே நம் வலிமை.
மாறுபடுவது துரோகமல்ல; உண்மையில் அதுதான் ஜனநாயகத்தின் உயிர்நாடி.
மத்திய அரசை, மாநில அரசை, அதிகாரங்களை நாங்கள் வேண்டிக் கொள்கிறோம். எங்கள் கவலைகள் மீது விரைந்து கவனம் செலுத்துங்கள், நமது அரசியல் சட்டத்தை அது எழுத்தில் உள்ளபடியும், அது நோக்கத்திற்கு உகந்த வகையிலும் நிலை நிறுத்த விரைந்து செயல்படுங்கள்.
– ஆயுதப்படையின் உயர் பொறுப்புகளில் பணியாற்றி
ஓய்வு பெற்ற 114 அதிகாரிகள்
Signatories (in alphabetical order of last name)
Lt Col E.N. Ambre
Brig V.K.S. Antony
Maj M.K. Apte
Col C.T. Arasu
Lt Col Israr Asghar
Cdr C.R. Babu
Lt Cdr P.S. Bal
Lt Cdr Rakeh Bali
Maj Gen Dipankar Banerjee
Lt Gen C.A. Barretto
Brig Noel Barretto
Col T.S. Bedi
Surg Cdr P Bellubi
Petty Off Gajanan Bhat I.N.
Cdr P.G. Bhat
Gp Capt A.V. Bhagwat
Col V. Bopiah
Maj Gen P.R. Bose
Vice Adm A. Britto
Col R.T. Chacko
Lt Col M. Chandrasekhar
Cdre R. Clarke
Col K.S. Choudhry
Brig T.P.S. Chowdhury
Brig Dileep Deore
Col Samuel Dhar
Lt Gen F.T. Dias
Lt Col A.P. Durai
Gp Capt M.P. Elangovan
Maj Gen Shyamal Ghosh
Col V. Nanda Gopal
Cdre E.C. Govindan
Col V. Govindarajan
Col R.P. Grover
Cdre P.C. Gulati
Cdr M. Hari
Lt Col Muzaffar Hasan
Brig Prem Hejmadi
AVM Kapil Kak
Col A.T. Kalghatgi
Maj Gen MPS Kandal
Col M.S. Kapoor
Maj Gen T.K. Kaul
Lt Col P.B. Keskar
Lt Col V. Kharkar
Wg Cdr R. Khosla
Brig Anil Malhotra
Col Arun Malhotra
Lt Col R.C. Malhotra
Brig G.K. Malik
Cdre G. Menezes
Wg Cdr S.N. Metrani
Maj G.N. Misra
AVM R.P. Misra
Col Biman Mistry
Col R.B. Mistry
Col A.K. Mitra
Col Pradip Mitra
Maj Gen H. Mukherji
Maj Gen R.P.R.C. Naidu
Col Pavan Nair
Lt Col V.K. Nair
Col R.L.V. Nath
Cdr M. Nirmal
Lt Gen Vijay Oberoi
Rear Adm Alan O’Leary
Air Cdre Tanpat Pannu
Lt Col Niraj Pant
Col R.C. Patial
Cdr Hector Poppen
Capt Subbarao Prabhala IN
Brig Ranjit Prasad
Brig V.H.M. Prasad
Wg Cdr K.V. Raghuram
Brig R.S. Rajan
Col S.S. Rajan
Cdr S.M. Rajeshwar
Air Marshal Philip Rajkumar
Col T.N. Raman
Admiral L. Ramdas
Vice Adm I.C. Rao
Col T.K. Ravindranath
Air Marshal D.S. Sabhikhi
Lt Col Nagaraj Sastry
Lt Gen K.M. Seth
Col P.D. Shah
Brig Baqir Shameem
Lt Gen Y.N. Sharma
Lt Col H.D. Shirmane
Vice Adm M.R. Schunker
Cdr M.A. Somana
Brig Amardeep Singh
Gp Capt D.R. Singh
Brig Joginder Singh
Brig Mastinder Singh
Cdr Rajiv Singh
Col Salam K Singh
Col S. Srikantha
Brig M. Sudandiram
Flt Lt R. Suresh
Sgt M.N. Subramani
Lt Cdr P. Subramanyam
Maj Gen L. Tahliani
Cdr S.P. Taneja
Cdr T.P. Tharian
Lt Col J.K. Thomas
Cdr M. Thomas
Cdr N. Tripathy
Air Marshal N.V. Tyagi
Capt A.K. Varma
Wg Cdr B.J. Vaz
Maj Rajah Velu
Lt Col R. Venugopal
Maj Gen S.G. Vombatkere
-Kanagaraj Karuppaiah –