• Sat. Oct 11th, 2025

“பாடசாலை  அரசியலுக்கான  களம் அல்ல” – றிப்கான் பதியுதீன்

Byadmin

Aug 3, 2017

வடமாகாண சபை உறுப்பினர் றிப்கான் பதியுதீன் அவர்களின்  பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து எருக்கலம்பிட்டி மகளிர் மகா வித்தியாலயத்திற்கான தளபாடங்கள் இன்று வழங்கி வைக்கப்பட்டது

எருக்கலம்பிட்டி கிராமத்தில் அமையப்பெற்ற பாரம்பரிய பாடசாலைகளில் ஒன்றான இப் பாடசாலைக்கு பல அபிவிருத்தி பணிகளை மேட்கொண்டுவரும் வடமாகாண சபை உறுப்பினரும் பிரதம எதிர்க்கட்சி கொறடாவும்  அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின்  உயர்பீட உறுப்பினருமான றிப்கான் பதியுதீன் அவர்களின் மற்றுமொரு உதவியாக தளபாடங்களை தனது பன்முக நிதியிலிருந்து பாடசாலை அதிபர் அவர்களிடம் கையளித்தார்
மேலும் இந் நிகழ்வில் உரையாற்றிய றிப்கான் பதியுதீன் அவர்கள்

” மாகாண சபைகளில் நான் எதிர்க்கட்சியில் இருந்தாலும் குறைந்த நிதி ஒதுக்கீட்டினை அரசாங்கம் எமக்கு வழங்கினாலும் அவை அனைத்திலும் பாடசாலைகளுக்கே முன்னுரிமை வழங்கி எனக்கு வழங்கப்பட்ட நிதியினை செலவிட்டு வருகின்றேன்  வாக்குகளை எண்ணி அரசியல் இலாபத்தினை எண்ணி சமூக சேவை செய்யும் அரசியல் வாதிகள் பலர் இன்று சேவகர்களாக வளம் வருகின்றனர்  ஆனால் எனக்கு கிடைக்கப்பெற்ற இந்த பதவி நிறைவடைவதற்குள் மாணவர்களின் கல்விக்காகவும் அவர்களது முன்னேற்றத்திற்காகவும் பாடுபடுகிறேன் பாடசாலைகளுக்கு பெரும்பாலான அரசியல்வாதிகள் எந்தவொரு சலுகைகளையும் பெரிதாக செய்வதில்லை ஆனால்  அவ்வாறு செய்தாலும் அங்கு அரசியலை பேசுகின்றார்கள் நாம் அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும் பாடசாலை என்பது அரசியலுக்கான ஒரு களம் அல்ல யாராக இருந்தாலும் சரி எந்த மதமாக இருந்தாலும் சரி கல்வி மாணவர்களின் கல்விக்காக நாம் ஆற்றும் சேவை ஒரு ரூபாய்  பெறுமதியானாலும் அது பெறுமதியான ஒன்றுதான் எமது பிள்ளைகளுக்கு எமது கிராமங்களில் உள்ள பிள்ளைகளுக்கு நாங்கள் செய்யவேண்டிய நாங்கள் கொடுக்கவேண்டிய பெரும் சொத்து கல்வி மாத்திரம்தான் கல்வி ஒன்றை உங்கள் குழந்தைகளுக்கு ஒழுங்கான முறையில் வழங்கினால் அது அவர்களுடைய வாழ்நாள் முழித்து ஒரு பாதுகாப்பை வழக்கும் எனவே ஆசிரியர்களும் பெற்றோர்களும் மாணவர்களின் கல்வி விடயத்தில் அதி கவனம் செலுத்துங்கள் நான் அரசியலில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் என்னால் இயன்ற உதவிகளை செய்வேன் ” என தெரிவித்தார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *