• Sat. Oct 11th, 2025

பாராளுன்ற அமர்வு குறித்து ஜனாதிபதியின் தீர்மானம்

Byadmin

Jan 27, 2023


ஒன்பதாவது பாராளுமன்றத்தின் மூன்றாவது கூட்டத்தொடரை இன்று (27) நள்ளிரவுடன் ஒத்திவைப்பதற்கான வர்த்தமானி அறிவித்தல் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவினால் வெளியிடப்பட்டுள்ளது.

அதற்கமைய ஒன்பதாவது பாராளுமன்றத்தின் நான்காவது கூட்டத்தொடர் எதிர்வரும் பெப்ரவரி 08 ஆம் திகதி காலை 10.00 மணிக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் ஆரம்பித்து வைக்கப்படும்.

இக்கூட்டத்தொடர் முடிவடைந்து புதிய கூட்டத்தொடர் ஆரம்பமாகும் சந்தர்ப்பத்தில் சம்பிரதாயப்படி ஜனாதிபதியினால் அக்கிராசன உரை நிகழ்த்தப்படும்.

அந்தவகையில் பாராளுமன்றத்தில் ஆற்றப்படும் அக்கிராசன உரையில் 75 ஆவது சுதந்திர தினக் கொண்டாட்டத்துடன் இணைந்ததாக நாட்டில் அமுல்படுத்த தீர்மானித்திருக்கும் புதிய கொள்கைகள், புதிய சட்டங்கள், 2023-2048 வரையான காலப்பகுதிக்குள் சுதந்திர தினத்தின் நூற்றாண்டு விழாவைக் கொண்டாடுவதற்கு ஏற்றவாறு நாட்டின் முன்னேற்றத்திற்காக கட்சி, நிறம், இனம்,மத பேதமின்றி கட்டாயமாக நடைமுறைப்படுத்த வேண்டிய வேலைத்திட்டம் தொடர்பான விடயங்கள் உள்ளடக்கப்படும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *