ரவிக்கு எதிராக கையெழுத்திட்டவர்களின் பெயர் விபரம் வெளியானது #Bandula Gunawardane #Ravi Karunanayake
வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்கவிற்கு எதிராக கையளிக்கப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணையில் கையெழுத்திட்டவர்களின் பெயர் வெளியிடப்பட்டுள்ளது.
கூட்டு எதிர்க்கட்சியின் 32 நாடாளுமன்ற உறுப்பினர்களும் கையெழுத்திட்டு குறித்த நம்பிக்கையில்லாப் பிரேரணை சபாநாயகரின் அலுவலகத்தில் நேற்று கையளிக்கப்பட்டிருந்தது.
மத்திய வங்கியின் சர்ச்சைக்குரிய திறைசேரி பிணை முறிப்பத்திர விவகாரம் சம்பந்தமாக அமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டு தொடர்பிலேயே இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணையை முன்வைத்துள்ளதாக கூட்டு எதிர்க்கட்சியினர் தெரிவித்திருந்தனர்.
கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தனவின் தலைமையில் குறித்த நம்பிக்கையில்லா பிரேரணை கையளிக்கப்பட்டுள்ளது.
இதில் கையெழுத்திட்டவர்களின் பெயர் தற்போது சமூகவலைத்தளங்களில் வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.