கடந்த இரண்டு வருடங்களில் அமெரிக்க டொலருக்கு எதிராக கனேடிய டொலரின் பெறுமதி அதிகரித்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
100 கனேடிய டொலர் 80.55 அமெரிக்க டொலர்கள் என்ற பெறுமதியைத் தொட்டு பின்னர் 80.4 டொலர்கள் என்ற அளவில் நிலை கொண்டுள்ளதாக புதிய புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.
கடந்த மே மாதத்திற்கான பொருளாதார வளர்ச்சி 0.2 சதவீதமாக இருக்கும் என்று முன்னுரைக்கப்பட்ட போதிலும், அது 0.6 சதவீதமாக பதிவான நிலையில், கனேடிய டொலரின் பெறுமதியும் சாதகமான நிலையினை எட்டியுள்ளது.
சமகால நிலையினை அடுத்து அமெரிக்காவுக்கு சென்று பொருட்களை கொள்வனவு செய்யும் கனேடியர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்படக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த காலங்களில் மசகு எண்ணெய் விலையில் ஏற்பட்ட வீழ்ச்சி, கனேடிய டொலரின் பெறுமதியை வெகுவாக பாதித்திருந்தது. தற்போது கனேடிய பொருளாதாரம் அதிலிருந்து மீட்சி பெறுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதேவேளை கனேடிய பொருளாதாரம் இந்த ஆண்டின் இறுதியில் சிறந்த நிலையினை எட்டும் என்று கனேடிய மத்திய வங்கியின் நிபுனர்களும் எதிர்பார்ப்பு வெளியிட்டுள்ளனர்.