• Sat. Apr 4th, 2026

QR முறை தொடர்பில் அமைச்சரின் அதிரடி அறிவிப்பு!

Byadmin

Feb 27, 2023


தேசிய எரிபொருள் உரிமம் தொடர்பான QR முறைமை தொடர்பில் அமைச்சர் கஞ்சன விஜேசேகர டுவிட்டர் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார்.

ஏப்ரல் 10ஆம் திகதி முதல் அதனை இடைநிறுத்துவது குறித்து எந்த தீர்மானமும் எடுக்கப்படவில்லை என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தரவுகளை ஆய்வு செய்து படிப்படியாக எரிபொருள் ஒதுக்கீட்டை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

நிதியமைச்சகம் மற்றும் ஏனைய பங்குதாரர்களுடன் கலந்தாலோசித்து தற்போதைய முறைமை தொடர்பில் தேவையான நடவடிக்கைகள் அடுத்த சில மாதங்களில் எடுக்கப்படும் என அமைச்சர் கஞ்சன விஜேசேகர தனது டுவிட்டர் செய்தியில் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *