• Sat. Oct 11th, 2025

சாரதிகளுக்கு பொலிஸாரின் முக்கிய அறிவித்தல்

Byadmin

Feb 28, 2023


கொஹுவல சந்தியில் நிர்மாணிக்கப்படவுள்ள மேம்பாலத்தின் நிர்மாணப் பணிகள் பெப்ரவரி 22ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டு மே 31ஆம் திகதி வரை மேற்கொள்ளப்படவுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த நிர்மாணப்பணிகள் மேற்கொள்ளும் காலத்தில் பயணிகள் பஸ்கள் மற்றும் இலகுரக வாகனங்கள் கொஹுவல சந்தி ஊடாக பயணிக்க முடியும்.

ஆனால், மேம்பாலம் அமைக்கும் பணிகள் இடம்பெற்று வருவதால், போக்குவரத்து நெரிசலை குறைக்க, மாற்று வழிகளை பயன்படுத்துமாறு, போலிஸார் பொதுமக்களை கேட்டுக் கொண்டுள்ளனர்.

வீதி அபிவிருத்தி அதிகாரசபை, பொதுமக்களுக்கு அறிவிப்பதற்காக மாற்று வழிகளைக் குறிக்கும் பெயர்ப் பலகைகளை, வில்லியம் வீதி – காலி வீதி, நுகேகொட சந்தி, கிருலப்பன சந்தி, பொரலஸ்கமுவ சந்தி, பிபிலியான சந்தி, பாமன்கட சந்தி மற்றும் அதிவேக வீதி – கஹதுடுவ வீதி ஆகிய இடங்களில் அமைத்துள்ளது.

அந்த இடங்களில் போக்குவரத்து கடமைகளில் ஈடுபட்டிருக்கும் பொலிஸாரின் வழிகாட்டலின்படி செயல்படுமாறு வாகன சாரதிகளை பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.

(அரசாங்க தகவல் திணைக்களம்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *