• Sat. Apr 4th, 2026

வன்னி, புத்தளம் மாவட்டங்களில் கடும் வறட்சி

Byadmin

Aug 8, 2017

வன்னி மாவட்டத்திலும், புத்தளம் மாவட்டத்திலும் ஏற்பட்டுள்ள கடும் வறட்சியினால் பாதிக்கப்பட்ட மக்களின் குடி நீர் தேவை தொடர்பில்கவனம் செலுத்துமாறு கைத்தொழில், வணிகத் துறை அமைச்சரும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவருமான றிசாத் பதியுதீன் அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பா மற்றும் மாவட்ட அரசாங்க அதிபர்களிடத்தில் வேண்டியுள்ளதாக அமைச்சரின் இணைப்பு செயலாளர் இர்ஷாத் றஹ்மத்துல்லா தெரிவித்துள்ளார்.

மன்னார். வவுனியா, முல்லைத்தீவு மாவட்டங்களில் கடந்த சில மாதங்களால குடிநீருக்கான தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில்,நீர் நிலைகளில் மற்றும் குளங்களில் உள்ள நீர் மட்டம் குறைந்து காணப்படுவதாகவும் அமைச்சர் றிசாத் பதியுதீன் அனர்த்த முகாமைத்துவ அமைச்சருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது மன்னார் மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள குடிநீர் தட்டுப்பாட்டை நிவர்த்திக்கும் வகையில் மேலதிக பௌசர்களை பயன்படுத்தி தண்ணீரை விநியோகிக்கும் செயற்பாடுகளை முன்னெடுக்குமாறு அமைச்சர் றிசாத் பதியுதீன் மன்னார் அரசாங்க அதிபரை கோரியுள்ளார்.

அத்தோடு புத்தளம் மாவட்டத்தின் வணாத்தவில்லு பிரதேச செயலகப் பிரிவில் குடிநீர் தட்டுப்பாடு நிலவுவதாகவும் அம்மக்களின் வேண்டுகோளான பௌசர் மூலம் 3 கிராம அதிகாரி பிரிவில் உள்ள 11 கிராமங்களுக்கு நீர் விநியோகத்தை பெற்றுத்தருமாறும் அமைச்சர் றிசாத் பதியுதீனிடத்தில் கரைத்தீவு கிராம அபிவிருத்தி சங்கத்தினர் வேண்டியுள்ள நிலையில் அது தொடர்பிலும் அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பாவுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் அமைச்சர் றிசாத் பதியுதீன் குறிப்பட்டுள்ளதாக அமைச்சரின் இணைப்பு செயலாளர் தேமான்ய இர்ஷாத் றஹ்மத்துல்லா மேலும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *