• Sat. Oct 11th, 2025

சிறை தண்டனை – மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

Byadmin

Apr 20, 2023

அவதூறு வழக்கில் 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டதை எதிர்த்து ராகுல் காந்தி தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து சூரத் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முன்னாள் காங்கிரஸ் தலைவரான ராகுல் காந்தி கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது, மோடி என்ற பெயர் கொண்டவர்கள் திருடர்கள் என பேசியதாகவும், அவர் பிரதமர் மோடியை மறைமுகமாக தாக்கியதாகவும் பாஜக சார்பில் சூரத் நீதிமன்றத்தில் வழக்கு தொரடப்பட்டது.

பிரதமர் மோடியின் பெயரை பயன்படுத்தி சர்ச்சையாக பேசிய இந்த வழக்கில் ராகுல்காந்தி குற்றவாளி என தீர்ப்பளித்த சூரத் நீதிமன்றம் அவருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதித்தது. மேலும், ராகுல் காந்தி மேல்முறையீடு செய்வதற்காக 30 நாட்கள் இந்த தண்டனையை நிறுத்தியும் வைத்து உத்தரவிட்டது. இதை அடுத்து வயநாடு பாராளுமன்ற உறுப்பினராக இருந்த ராகுல் காந்தியை, எம்பி பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்து மக்களவைச் செயலகம் அறிவித்தது.

இந்த சிறை தண்டனை காரணமாக, அடுத்த 8 ஆண்டுகளுக்கு ராகுல் காந்தி தேர்தலில் போட்டியிட முடியாத சூழல் உருவாகியுள்ளது. ராகுல் காந்தியின் தகுதி நீக்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கேரளா, தமிழ்நாடு, தெலங்கானா, பஞ்சாப், டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தினர். மேலும் அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் ராகுல் காந்தியின் தகுதி நீக்கத்திற்கு கண்டனம் தெரிவித்தனர்.

பின்னர் கடந்த ஏப்ரல் 3 ஆம் திகதி, அவதூறு வழக்கில் சூரத் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து ராகுல் காந்தி மேல்முறையீடு செய்தார். இந்த மனுவை விசாரித்த சூரத் நீதிமன்றம், ராகுல் காந்தியின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *