• Sat. Oct 11th, 2025

நுவரெலியா நகரை நிர்மாணிப்பது தொடர்பில் அமைச்சரவை தீர்மானம்

Byadmin

Apr 25, 2023

நுவரெலியா மாவட்டத்தில் 4 மாடிகளுக்கு மேல் புதிய கட்டிடங்களை நிர்மாணிப்பது மே 1 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

நகர அபிவிருத்தி அதிகாரசபை சட்டத்தின் ஏற்பாடுகளுக்கு அமைவாக ஒழுங்குமுறைகளை அமுல்படுத்துவதற்கு ஜனாதிபதியினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சர்கள் சபையில் அங்கீகாரம் வழங்கி தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

நுவரெலியா பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் முறைசாரா அபிவிருத்தி காரணமாக நுவரெலியா நகரின் அழகு படிப்படியாக குறைந்து வருவதாகவும், இது சுற்றுலாத்துறையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் ஜனாதிபதி அண்மையில் தெரிவித்தார்.

எனவே, இப்பகுதியில் சுற்றுலா வளர்ச்சிக்கு தேவையான சூழலை உருவாக்கும் வகையில், விரிவான சுற்றுலா மேம்பாட்டு மாஸ்டர் பிளான் தயாரிக்க வேண்டிய அவசியம் இருப்பதால், இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *