• Sun. Oct 12th, 2025

அந்தச் சிறுவனை தேடியது ஏன்..? லசித் மலிங்க கூறிய தகவல்

Byadmin

Jun 6, 2023

இலங்கை அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் லசித் மலிங்க வீடியோவொன்றில் தனது பாணியில் பந்து வீசிய சிறுவன் யார் என்பதை கண்டுபிடித்துவிட்டதாக தெரிவித்துள்ளார்.

சிறுவனை கண்டுபிடிப்பதற்கு உதவியவர்களிற்கு அவர் தனது நன்றியையும் தெரிவித்துள்ளார். பல சமூக ஊடகங்களில் வேண்டுகோள் விடுத்ததன் மூலம் 9 வயது சிறுவன் யார் என்பதை லலித் மலிங்க கண்டுபிடித்துள்ளார்.

இந்நிலையில் வீடியோவில் சிறுவன் பந்துவீசுவது தனது சிறுவயதை தனக்கு ஞாபகப்படுத்தியுள்ளது என குறிப்பிட்டுள்ள லசித்மலிங்க அந்த சிறுவனின் இயல்பான திறமையே அந்த சிறுவன் யார் என்பதை தன்னை தேட தூண்டியது எனவும் தெரிவித்துள்ளார்.

சிறுவனின் பெற்றோருடன் உரையாடிய பின்னர் அந்த சிறுவன் கிரிக்கெட் குறித்து பயிற்சி பெறுவதில் ஆர்வம் கொண்டிருந்தால் அந்த சிறுவனை கிரிக்கெட் பயிற்சிகள் உள்ள சிறந்த பாடசாலையில் சேர்ப்பது சிந்திக்கப்போவதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் பெற்றோர்களுடன் கலந்தாலோசித்துள்ளதை தொடர்ந்து சிறுவனின் வீட்டிற்கு அருகில் கிரிக்கெட் பயிற்சிக்கான வசதிகள் உள்ள சிறந்த பாடசாலையில் சேர்ப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்துள்ள லசித் மலிங்க அந்த சிறுவன் தனித்துவமான பாணியில் பந்து வீசுகின்றான்.

பலர் அந்த சிறுவனை என்னுடன் ஒப்பிட்டுள்ளனர். அந்த சிறுவன் தனக்கென ஒரு பாணியை கொண்டுள்ளமை அவனது திறமையை வெளிப்படுத்துகின்றது. அடுத்த மூன்று ஐந்து வருடங்களில் அவனது முன்னேற்றத்தை பார்க்க விரும்புகின்றேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *