• Sun. Oct 12th, 2025

புத்தளத்தில் திடீரென உயிரிழந்த காகங்கள்

Byadmin

Jun 8, 2023

புத்தளம் நெடுங்குளம் வீதியின் குடியிருப்பு பகுதியில் சுமார் 50 இற்கும் அதிகமான காகங்கள் உயிரிழந்துள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

இதன்போது அப்பகுதி மக்கள் புத்தளம் பிரதேச மிருக வைத்திய உத்தியோகத்தர் மற்றும் அலுவலக அதிகாரிகளுக்கு தகவல் வழங்கியுள்ளனர்.

இதனையடுத்து அப்பகுதிக்கு அதிகாரிகள் வருகைத் தந்து உயிரிழந்த காகங்களை பார்வையிட்டுள்ளனர்.

குறித்த காகங்கள் உயிரிழந்தமைக்கான காரணத்தை கண்டறிவதற்காக உயிரிழந்த காகத்தின் மாதிரிகளை பகுப்பாய்விற்காக பேராதனை பல்கலைக்கழகத்திற்கு அனுப்புவதற்காக கொண்டு சென்றுள்ளனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *