வெளியேற நபியவர்கள் விரும்பியபோது கஃபாவை தவாப் செய்தார்கள்
ஹாஜிகளே! நீங்கள் மிகச் சிறந்த இடத்தில் மிக முக்கியமான நாளில் இருக்குறீர்கள் இதில் பாவங்கள் மன்னிக்கப்படுகிறது பிரார்த்தனைகள் அங்கீகரிக்கப்படுகின்றது. இதனால்தான் நபியவர்கள் முழுமையாக திக்ரு துஆக்களில் ஈடுபடுவதற்காக தனது ஹஜ்ஜில் அரபா தினத்தில் நோன்பை விட்டார்கள் எனவே உங்களுக்காக அதிகமாக உங்கள் இரட்சகனிடம் பிரார்த்தனை செய்யுங்கள் யாரையெல்லாம் நேசிக்கிறீர்களோ யாருக்கெல்லாம் நீங்கள் கடமைப்பட்டுள்ளீர்களோ மேலும் எல்லா முஸ்லிம்களுக்கும் அவர்களின் நிலைகளை சீர்படுத்துமாறும் அவர்களை சத்தியத்தில் ஒற்றுமைப்படுத்துமாறும் அல்லாஹ்விடம் கேளுங்கள் மேலும் உங்களுக்கு யாரெல்லாம் உதவி செய்தார்களோ அவர்களை மறந்துவிடாதீர்கள். நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள். ‘‘உங்களுக்கு யாராவது நன்மை செய்தால் அவருக்கு பிரதி உபகாரம் செய்யுங்கள் உங்களிடம் அவருக்கு பிரதி உபகாரமாக கொடுப்பதற்கு எதுவும் இல்லை என்றால் அவருக்காக பிரார்த்தனை செய்யுங்கள்.’’
இஸ்லாத்தின் இரண்டு புனிதஸ்தளங்களுக்கும் பணிவிடை செய்வோர் ஹஜ்ஜாஜிகள் தங்களின் கடமைகளை இலகுவாக நிறைவேற்றிக் கொள்வதற்கான வசதிகளை செய்தோர் நிச்சயமாக முஸ்லிம்களுக்கு நன்மை செய்தவர்களில் முக்கியமானவர்களாகும் அவர்களில் முதண்மையானவர்கள் ஹாதிமுல் ஹரமைன் ஷரீபைன் மன்னர் ஸல்மான் பின் அப்துல் அஸீஸ் மேலும் பட்டத்து இளவரசர் முஹம்மது பின் ஸல்மானும் அவர்களுடன் பணி செய்பவர்களுமாகும் எனவே அவர்களுக்காக அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்.
என்றும் உயிரானவனும் நிலையானவனுமாகிய அல்லாஹ்வே! கொடையாளனே! கண்ணியத்திற் குரியவனே! இரண்டு புனிதஸ்தளங்களின் சேவகரான மன்னர் ஸல்மான் இப்னு அப்துல் அஸீஸை பொருந்திக் கொள்வாயாக அவருக்கு உதவுவாயாக அவரை உறுதிப்படுத்துவாயாக. எல்லா நலவுகளுக்கும் அவருக்கு துணை செய்வாயாக. முஸ்லிம்களின் ஒற்றுமையைப் பலப்படுத்துவதற்காக அவர் ஆற்றும் பணிகளுக்காக அவருக்கு நற்கூலி வழங்குவாயாக அவரின் பட்டத்து இளவரசரான முஹம்மத் பின் ஸல்மான் மீது பரகத் செய்வாயாக. யா அல்லாஹ் அவரைக் கொண்டு மன்னரின் பலத்தை பலப்படுத்துவாயாக அவரை முஸ்லிம்கள் ஒற்றுமைப்படுவதற்கான காரணமாக ஆக்குவாயாக! இறைவா! ஹாஜிகளின் ஹஜ்ஜை ஏற்றுக்கொள்வாயாக. அவர்களது காரியங்களை அவர்களுக்கு இலகுபடுத்துவாயாக, அவர்களுக்கு யாரெல்லாம் தீங்கை நாடினானோ அவனது தீங்கிலிருந்து அவர்களைப் பாதுகாப்பாயாக. இறைவா! பாதுகாப்பானவர்களாக நன்மைகளை சம்பாதித்துக்கொண்டவர்களாக அவர்களின் நாடுகளுக்கு திரும்பிச்செல்ல உதவுவாயாக. இறைவா முஸ்லிமான ஆண்களுக்கும் பெண்களுக்கும் பாவ மன்னிப்பை வழங்குவாயாக. முஃமினான ஆண்களுக்கும் பெண்களுக்கும் பாவ மன்னிப்பை அளிப்பாயாக. அவர்களுக்கு மத்தியில் ஒற்றுமையை பலப்படுத்துவாயாக அவர்களின் உள்ளங்களை சீர்படுத்துவாயாக. அவர்களின் விடயங்களை பொருப்பேற்பாயாக அவர்களின் நாடுகளில் அவர்களைப் பாதுகாப்பாயாக. அவர்களை ஒற்றுமைப்படுத்துவாயாக அவர்களின் உயிர்களைப் பாதுகாப்பாயாக. அவர்களின் வசதிகளில் பரகத் செய்வாயாக மிகச்சிறந்த வார்த்தைகள் செயல்களின் பால் அவர்களுக்கு வழிகாட்டுவாயாக.