• Sun. Oct 12th, 2025

ஆந்திராவில் கிராமங்களில் மீன் மழை- ஆச்சரியத்துடன் அள்ளிச் சென்றனர்

Byadmin

Jul 21, 2023

ஆந்திரா மாநிலம் ஸ்ரீகாகுளம் மாவட்டம் மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் நேற்று ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் வஜ்ரபு கொட்டூர் மண்டலம், வஜ்ரபு கோனேரு, பூபால பள்ளி, காளேஸ்வரி நகர், சுல்தானாபாத் சாஸ்திரி நகர், மகாதேவ்பூர் உள்ளிட்ட இடங்களில் கன மழையுடன் வானத்தில் இருந்து மீன்கள் விழுந்தன. இதனால் சாலைகள் முழுவதும் மீன்கள் துள்ளி குதித்தபடி ஊர்ந்தன. 100 நாள் வேலைக்கு சென்ற பெண்கள் சாலையில் கொட்டிய மீன்களை ஆச்சரியத்துடன் பார்த்து தங்களது வீடுகளுக்கு அள்ளிச் சென்றனர். இதேபோல் வஜ்ரபு கோனேரு கிராமத்தில் உள்ள ஆஞ்சநேயர் கோவில் வளாகத்தில் அதிக அளவு மீன்கள் விழுந்தன. கிராம மக்கள் மற்றும் பக்தர்கள் தரையில் விழுந்த மீன்களை போட்டி போட்டு மீன்களை சேகரித்து எடுத்துச் சென்றனர். ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் முதல் முறையாக வானத்திலிருந்து மழையுடன் மீன்கள் மீன்கள் விழுந்ததாக கிராம மக்கள் தெரிவித்தனர். வானத்திலிருந்து விழுந்த மீன்கள் கருப்பு நிறத்தில் பார்ப்பதற்கு பயங்கரமாக இருந்ததாக தெரிவித்தனர். வானத்திலிருந்து மழையுடன் மீன்கள் கொட்டியதை அப்பகுதி மக்கள் தங்களது செல்போன்களில் வீடியோவாக எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டனர். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *