• Sat. Oct 11th, 2025

யூசுப் அலி எனும் மனுஷ்யசினேகி…

Byadmin

Aug 1, 2023

கடந்த வாரம் மரணமடைந்த, கேரள முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி குடும்பத்தை சந்தித்து ஆறுதல் கூறிட லூலூ குரூப் சேர்மன் யூசுப் அலி இன்று கோட்டயம் மாவட்டத்தில் புதுப்பள்ளியில் உள்ள உம்மன் சாண்டி இல்லத்துக்கு வந்திருந்தார்..

லூலூ குரூப் சேர்மன் யூசுப் அலி வந்திருக்கும் விபரமறிந்து, அருகாமையில் உள்ள அரசாங்க நடுநிலை பள்ளிக்கூட மாணவர்கள் ஆசிரியைகள் அவரை சந்திக்க வந்திருந்தனர். மாணவர்கள் மத்தியில் உரையாடிய யூசுப் அலியிடம்  சில மாணவர்கள்

“எங்கள் பள்ளியில் 400 மாணவர்கள் படிக்கிறோம்.. தூரத்தில் இருந்து வருகை தருபவர்களுக்கு சரியாக போக்குவரத்து வசதி கிடையாது..

நாங்கள் வந்து செல்வதற்கு ஒரு ஸ்கூல் பஸ் வாங்கி தருவீர்களா” என்று கேட்க யூசுப் அலி சிரித்தபடி வாங்கிட்டா போச்சு என்று கூறினார்.

அங்கிருந்த உம்மன் சாண்டி மகனிடம் அந்த பள்ளிக்கூடம் குறித்த விபரங்களை உறுதிப்படுத்திய யூசுப் அலி தனது நிறுவன மேனேஜரை அருகில் அழைத்து என்ன விலையானாலும், 45 Seater School Bus இன்னும் ஒரு வாரத்தில் வாங்கி ஒப்படைக்க அறிவுறுத்தியதை பார்த்து மாணவர்கள் முகம் மலர்ந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *